×

பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள சாலைகளில் வெள்ளை, சிகப்பு நிறங்களில் பெயின்ட் பூசி விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூரில் விபத்துகளை குறைக்கும் வகையில் முதல் கட்டமாக பள்ளி பகுதிகளில் சாலையில் சிகப்பு, வெள்ளை நிற பெயின்ட் அடித்து விபத்து பகுதியாக எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருவள்ளூர்  மாவட்டம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு பஸ்கள் சென்று வருகின்றன. மேலும் மாவட்ட தலைநகரான திருவள்ளூருக்கு பல்வேறு வெளி நிமித்தமாக தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கானோர் வந்து  செல்கின்றனர்.இதனால் திருவள்ளூர் நகரம் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கிறது. இது ஒருபுறம் என்றால், இருக்கும் பரபரப்புக்கு இணையாக சாலை விபத்துகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதை சற்று குறைக்கும் நோக்கோடு  திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., அரவிந்தன் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார்.அதன்படி, அவரது உத்தரவின்பேரில், போக்குவரத்து காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் மற்றும் போலீசார் விபத்துப் பகுதிகளை கணக்கிட்டு அந்தப்  பகுதிகளில் சாலையில் 100 மீட்டருக்கு முன்பாக வேகத்தடை அமைத்துள்ளனர்.

முதற்கட்டமாக காக்களூர் பைபாஸ் சாலையில் சிசிசி மெட்ரிக் பள்ளி மற்றும் ஞானவித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆகிய பகுதிகளில், பள்ளிகளின் நேரே சாலையில், சிகப்பு, வெள்ளை நிற பெயின்ட் மூலம் விபத்து பகுதி என அறிவிக்கப்பட்டு,  மாணவர்கள் பாதுகாப்பாக சாலையை கடக்க வழிவகை செய்துள்ளனர். இதுகுறித்து எஸ்.பி., அரவிந்தன் கூறுகையில், ‘‘திருவள்ளூர் நகரில் அதிகம் விபத்து ஏற்படுத்தும் பகுதிகளில், பேரிகாட், வேகத்தடை, ஒளிரும் பட்டை என  எல்லாவற்றையும் பயன்படுத்திப் பார்த்தோம், அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்துபவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. அதனால்தான், விபத்துப் பகுதிகளில் இதுபோன்று பெயின்ட்  அடித்து எச்சரிக்கை விடுத்துள்ளோம். அப்போதாவது குறைப்பார்கள் என எண்ணித்தான் இதைச் செய்துள்ளோம். விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

Tags : schools ,roads ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...